இந்தியாவிற்கான ஆப்கனின் முதல் பெண் தூதரான சகியா வர்தக், மகாராஷ்டிரா ஆளுநருடன் சந்திப்பு!

இந்தியாவிற்கான ஆப்கனின் முதல் பெண் தூதரான சகியா வர்தக் திங்களன்று மும்பையில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் பொறுபேற்றுக் கொண்டார். அதையடுத்து மரியாதை நிமித்தமாக அவர் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்துப் பேசினார்.

அப்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டடம் கட்ட இந்தியா உதவியதையும், கணிசமான ஆப்கன் மாணவர்களுக்கு இந்தியா மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதையும் அவர் வெகுவாகப் புகழ்ந்துரைத்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக கோஷியாரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கான இந்தியத் தூதரும், அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் அதிகாரியுமான சகியா வர்தக், ராஜ் பவனில் திங்களன்று என்னை சந்தித்துப் பேசினார்.

அப்போது இருதரப்பு உறவு மேலும் வலுப்பட வேண்டுமென்று தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார். அதேசமயம் இருதரப்புக்கும் இடையே நிலவும் பிரச்சினைகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் தீர்க்க முயற்சிகள் எடுப்பதாக நான் உறுதியளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x