கவலைக்கிடமான நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன்?! அதிகாரத்தை கைப்பற்றிய கிம்மின் சகோதரி!!

வடகொரியா அதிபர் கிம் ஜாங்க் உன், கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் நாட்டின் அனைத்துப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர், கிம் ஜாங்க் உன், 36, உடல் நிலை குறித்தும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான நிலையில் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டார்.

இதனிடையே ஆட்சியில் தனது சகோதரி கிம் யோ ஜாங்க், 31 என்பவருக்கு முக்கிய பொறுப்பு வகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்குள்ள அனைத்து அதிகாரத்தை கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகின.இந்நிலையில், கிம் ஜாங்க் உன், கோமா நிலையில் இருப்பதால், அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் நாட்டின் அனைத்துப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான தகவலை தென்கொரியாவின் முன்னாள் அதிபரான கிம் டே ஜங்கின் உதவியாளராக இருந்த சாங் சங் மின் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அவர் வாழ்வு இன்னும் முடிவு பெறவில்லை. தற்போதைய நிலவரப்படி வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் (தேசியம் மற்றும் சர்வதேசம் உட்பட) அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவின் பொருளாதார நிலைமையை கிம் சமீபத்தில் ஆய்வு செய்ததாகவும், கொரோனா உருவாக்கிய கடுமையான சவால்களை ஒப்புக் கொண்டதாகவும் வட கொரிய ஊடகங்கள் தெரிவித்தன. மேலும் உணவுப் பற்றாக்குறையிலிருந்து நாட்டை காப்பாற்ற கிம் வட கொரிய குடிமக்களை தங்கள் செல்ல நாய்களை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

இதனிடையே அதிபர் கிம், தனது சகோதரி கிம் யோ-ஜாங்க் உட்பட அவரது உதவியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்துள்ளதாக தென் கொரியாவின் முக்கிய அதிகாரி நேற்று முன் தினம் தகவல் வெளியிட்டார். “கிம்மின் சகோதரியே இப்போது ஒட்டுமொத்த அரசு விவகாரங்களை வழிநடத்துகிறார்” என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x