பந்து எடுக்கப்போய், சுவர் சந்துக்குள் சிக்கிய சிறுமி!

விளையாடி கொண்டிருந்த சிறுமி, இரண்டு சுவர்களுக்கு இடையே விழுந்த பந்தை, எடுப்பதற்காக போய் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் ஓங்கோலில் உள்ள இந்திரம்மா காலனியை சேர்ந்த மீனாட்சி என்ற சிறுமி, நேற்று தனது வீட்டருகே, பந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது சுவர்களுக்கு இடையே உள்ள மிகவும் குறுகலான சந்துக்குள் பந்து விழுந்துள்ளது. அந்த பந்தை எடுப்பதற்காக குறுகலான சந்துக்குள் சென்ற மீனாட்சி சுவர்களுக்கு இடையில் சிக்கி கொண்டாள்.

சுமார் இரண்டு மணி நேரம் அந்த பகுதி மக்கள் முயற்சித்தும் மீனாட்சி மீட்க இயலவில்லை. இதையடுத்து சிறுமி குறுகலான சந்தில் சிக்கி கொண்டது பற்றி தீயணைப்பு துறையினருக்கு பெற்றோர் தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுமி மீனாட்சியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x