2500 வருடங்களுக்கு முந்தைய மம்மி பொதுமக்கள் முன்னிலையில் திறப்பு!! இணையத்தில் வைரல்!!!

எகிப்தில் பார்வையாளர்கள் பலரின் முன்னிலையில் திறக்கப்பட்ட  பழமையான மம்மி சவப்பெட்டி வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.

எகிப்தில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்தவர்களை துணியில் சுற்றி சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. அவ்வாறு புதைக்கப்பட்டு தற்போது கண்டெடுக்கப்படும் சடலங்களை ஆராய்ச்சியாளர்கள் மம்மி என்றழைக்கின்றனர்.

மெம்ஃபிஸ் என்ற இடத்தில் தான் எகிப்தியர்களின் மிகப் பழைமையான கல்லறைகள் உள்ள சக்யுரா என்ற பகுதி உள்ளது. எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி அமைச்சகம், இந்த பகுதியிலிருந்து 59 மர சவப்பெட்டிகளை தொல்பொருள் ஆராய்ச்சிக்காக எடுத்துள்ளது. அந்தப் பகுதியில், போதகர்கள், உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலைவர்களின் உடல்களை வைத்திருக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை, 2500 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு சவப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அமைச்சர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் திறந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த பெட்டிக்குள் பிரத்யேகமாக உடல் அடக்கம் செய்வதற்கு தயாரிக்கப்பட்ட துணிகளில் சுற்றப்பட்ட மம்மியின் சடலம் ஒன்று இருப்பது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மம்மி நியூ க்ராண்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x