17-வதாக ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ.,வுக்கு கொரோனா!

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரிசையாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 17-வது எம்.எல்.ஏவாக ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ., தங்க பாண்டியனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் தங்க பாண்டியன். இவரது மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் 10 நாட்களுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் மதுரையில்  தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். அப்போது தங்க பாண்டியனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்தது.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தார். தற்போது தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் இப்போது வீட்டில்  தனிமைப்படுத்திக் கொண்டார். இது வரை  தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x