மாணவியருக்கு ஆபாச வீடியோ, படங்கள் அனுப்பிய மதபோதகர் அதிரடியாக சஸ்பெண்ட்!!

வேலூரில் மாணவியருக்கு ஆபாச வீடியோ, படங்கள் அனுப்பிய மதபோதகர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 2006ல் இருந்து, மதபோதனை வகுப்புக்கள் நடத்தப்படுகிறது. இதற்காக, சென்னையை சேர்ந்த சேர்ந்த மதபோதகர் சாமுவேல் ஜெய்சுந்தர் (50), என்பவர் விருதம்பட்டு பள்ளிக்கு வந்து மதபோதனை வகுப்புகளை நடத்தி வந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தி வந்துள்ள அவர், போலி டுவிட்டர் கணக்கு ஒன்றை தயாரித்து, அதன் மூலம், அப்பள்ளியில் படிக்கும், 10 மாணவியருக்கு ஆபாச படங்கள் அனுப்பி உள்ளார். இது குறித்து, மாணவியர், விருதம்பட்டு போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், ஆன்லைனில் ஆபாச வீடியோ படங்களை, அந்த மதபோதகர் அனுப்பியது உறுதியானது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “பள்ளி மாணவியருக்கு ஆபாச வீடியோ படம் அனுப்பிய மதபோதகர் சாமுவேல் ஜெய்சுந்தரை, ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளதாக, அவரை அனுப்பிய சென்னை நிறுவனத்தினர் கூறியுள்ளனர். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவியர் தரப்பில் மதபோதகரை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இந்த மதபோதகர் மேலும் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவியருக்கு ஆபாச படம் அனுப்பி உள்ளார். அந்தந்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்களில் இது குறித்து புகார்கள் உள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.