பணக்கார இந்தியர்கள் பட்டியலில் தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி!!!

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் தொடர்ந்து 13வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை இந்தியாவின் ‘டாப்-100’ பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து தற்போது 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தில் கவுதம் அதானி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது. மூன்றாம் இடத்தில் ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ நாடார், 4வது இடத்தில் அவன்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவன உரிமையாளர் ராதாகிஷண் தமானி, 5வது இடத்தில் அசோக் லேலாண்ட்டின் இந்துஜா சகோதரர்கள் உள்ளனர். 6 முதல் 10 இடங்கள் முறையே, சீரம் இந்தியா அதிபர் சைரஸ் பூனாவல்லா, பல்லோன்ஜி மிஸ்திரி, உதய் கோடக், கோத்ரெஜ் குடும்பம், லட்சுமி மிட்டல் ஆகியோர் உள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x