நடிகர் சுஷாந்த் சிங் மேனேஜர் திஷாவின் மரணம் தற்கொலை அல்ல… கொலை! திஷாவின் தந்தை திட்டவட்டம்!!!

கடந்த மாதத்தில் தற்கொலை செய்து கொண்டு மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் மேனேஜர் திஷாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரின் தந்தை சதிஷ் சலியன் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் படி ஜூன் 9ம் தேதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட திஷாவின் உடம்பில் காயம் வரலாம் ஆனால் போஸ்ட்மார்ட்டத்தில் அவரின் மர்ம உறுப்பில் பல காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 9ம் தேதி இறந்த திஷாவை எதற்கு ஜூன் 11ம் தேதியன்று இரண்டு நாள் கழித்து போஸ்ட்மார்ட்டம் செய்யவேண்டும்? அந்த இரண்டு நாட்களுக்குள் நடந்தது என்ன? என்று கேட்கிறார்கள்.
மேலும் அவர் தன்னுடைய மகளின் மரணம் தற்கொலையல்ல அவரை பலாத்காரம் செய்துவிட்டு யாரோ மாடியிலிருந்தது தள்ளி கொலை செய்திருக்கிறார்கள் என்கிறார். மேலும் அவர் சுஷாந்தின் காதலி ரியா மீதும் சந்தேக கணைகளை வீசியுள்ளார்.
என் மகள் இறந்து ஒரு வாரத்தில் சுஷாந்த் இறக்க காரணம் என்ன என்றும், தாம் சுஷாந்தை அவர் சாவதற்கு முதல் நாள் சந்திக்க சென்றபோது அவர் உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தார் என்று அவரின் காதலி ரியா கூறியுள்ளார். உடலும், மனமும் சரியில்லாத சுஷாந்தை அவரின் காதலி ஏன் தனியாக விட்டுச்சென்றார்?
அதனால் தனது மகள் திஷா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டள்ளதாக அவரின் தந்தை சதிஷ் புகார் கூறியுள்ளார். மேலும் பிஜேபி தலைவர் நாராயண் சலைன் கூட சுஷாந்தின் மரணமும், அவரின் மேனேஜர் திஷாவின் மரணமும் தற்கொலையல்ல கொலையாக இருக்கலாம் என்று புகார் கூறியுள்ளார்.