தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!!

தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் பிறப்பித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:

டாஸ்மாக்மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை ஆணையராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட துணை கலெக்டர் சரவணன் ஈரோடு மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை இணை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தமிழ்நாடு தொழில் முதலீட்டுகழகத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வணி வரித்துறை இணை ஆணையர் கிராந்தி குமார் பழநி தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் கிர்லோஷ்குமார் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x