ஆன்லைனில் ரம்மி ஆடி பணத்தை பறிகொடுத்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைனில் ரம்மி மற்றும் பப்ஜி போன்ற விளையாட்டுகளில் பணத்தை இழந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார். கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் இவர், ஊரடங்கினால் கல்லூரி மூடப்பட்டிருப்பதால் அமைந்தகரையில் உள்ள டாட்டூ போடும் கடையில் வேலை பார்த்து வந்தார்.  நிதிஷ் நீண்ட நேரமாகியும் நேற்று வீடு திரும்பாததால், பெற்றோர்கள்  கடையின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.

கடைக்குச் சென்று பார்க்கலாம் என்று உரிமையாளர் சென்றுள்ளார். கடை வாசலில் நிதிஷின் இருசக்கர வாகனம் நின்றிருந்தது. ஆனால் கடை பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால், தன்னிடம் இருந்த சாவியை போட்டு கடையினுள் சென்றார் உரிமையாளர். அங்கு நிதிஷ் தூக்கில் தொங்கியபடி நிதிஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு அங்கு ஆய்வு செய்ததில் நிதிஷ் எழுதிய கடிதம் சிக்கியது. அதில்  ரம்மி சர்கிள், பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்களில் தனது சேமிப்பு பணத்தை இழந்து விட்டதாகவும், இழந்த பணத்தை மீட்க வேண்டும் என கடையின் பணத்தை வைத்து விளையாடி, அதிலும் தோல்வியடைந்துவிட்டேன். இதனால் தற்கொலை செய்கிறேன். அம்மா, அப்பா, காதலி ஆகியோர் மன்னித்துவிடுங்கள் என கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x