“myGOV” இணையதள வினாடிவினா போட்டி

இளைஞர்களிடையே, நாட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக, மத்திய அரசு வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம், “myGOV” இணையதளத்துடன் இணைந்து, ஜூலை 29-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை, “தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா” என்ற தலைப்பில் இணையதள வினாடிவினாப் போட்டியை நடத்துகிறது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்போட்டியில் 10 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. முதல் பரிசாக ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும் ஆறுதல் பரிசாக (7 பேருக்கு) ரூ.5,000-மும் அளிக்கப்பட உள்ளது. 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்திய குடிமக்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கான இணையதள இணைப்பு – https://quiz.mygov.in/quiz/aatmanirbhar-bharat-swatantra-bharat-quiz/

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x