தமிழகத்தில் புயலுக்கான எச்சரிக்கை கூண்டு!!!

தமிழகம் :

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரப் கடற்கரை நர்சபூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே இன்று இரவு கரையை கடக்க உள்ளது.

இதன் காரணமாக நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை ஏற்று கோடிக்கரை வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x