பிரான்ஸ் நாட்டில், பூனை வளர்க்க ஆசைப்பட்டு, புலிக்குட்டி வாங்கி சென்ற தம்பதி!!

பூனை வளர்க்க ஆசைப்பட்டு பிரான்ஸ் நாட்டு தம்பதி ஒன்று புலிக்குட்டியை வாங்கியதால் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டின் லே ஹார்வே நகரைச் சேர்ந்த தம்பதி சவன்னா பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் விளம்பரம் ஒன்றின் மூலமாக பூனை என்று நினைத்து புலிக்குட்டி ஒன்றை 2018 ம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ 5 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளனர்.

ஆனால், சில நாட்களில் குட்டியில் ஏற்பட்ட உருவ மாற்றத்தையடுத்து அவர்களுக்கு சந்தேகம் வந்ததால் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வளர்த்து வந்தது இந்தோனேஷியாவின் சுமத்ரான் வகை புலி என்று தெரியவந்தது.

பின்னர் 2 வருட விசாரணைக்கு பிறகு   பூனையை புலியாக மாற்றி விற்பனை செய்த விவகாரத்தில் 9 பேரை கைது செய்த காவல் துறையினர், புலிக்குட்டியை வன உயிரியல் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x