நீட் தேர்வை கொரோணா ஊரடங்கால் தவரவிட்டவர்கள் நாளை எழுதலாம்!!!

புதுடெல்லி:
கொரோனோ வைரஸ் தொற்று பாதிப்பினால் நடந்து முடிந்த நீட் தேர்வை எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு நாளை மீண்டும் தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி தேசிய தேர்வு முகமை அமைப்பினால் நடத்தப்பட்டது. இதில் கொரோனோ வைரஸ் தொற்று காரணத்தினால் மேற்கண்ட தேர்வுகளை எழுதாமல் பல மாணவர்கள் தவிர்த்து விட்டனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டை விட 13 சதவீத மாணவர்கள் நீட் தேர்வை நடப்பாண்டில் எழுதவில்லை. இதே நிலை தான் நாடு முழுவதும் உள்ளது.