மீரா மிதுன் விவகாரம் – ரசிகர்களுக்கு சூர்யாவின் அறிவுரை!

மீரா மிதுன் எனும் விளம்பர பேர்வழி கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பிரபலங்களை தரக்குறைவாக விமர்சித்து அற்ப விளம்பர வெளிச்சம் தேடிக் கொண்டார்.
அவரது இந்த அருவருப்பான செயலுக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் சூர்யா மற்றும் விஜயின் மனைவிகளை தரம் தாழ்ந்து விமர்சித்திருந்தார்.
இதனால் அவர்களது ரசிகர்கள் கொந்தளித்து போனார்கள். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த சூர்யா தற்போது கருத்து தெரிவித்துள்ளார். “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.” என 2018-ல் அவர் பதிவிட்ட டிவீட்டை மேற்கோள் காட்டி தற்போது கருத்து கூறியுள்ளார்.
அதில் எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம் என கூறியுள்ளார். மீரா மிதுனை கண்டித்த பாரதிராஜாவுக்கு நன்றி கூறியுள்ளார்.