மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளில் நினைவு கூறும் தலைவர்கள்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் மாணவர்களின் வழிகாட்டி என்று போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் 89வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் அப்துல் கலாம் நினைவுகளை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
Tributes to Dr. Kalam on his Jayanti. India can never forget his indelible contribution towards national development, be it as a scientist and as the President of India. His life journey gives strength to millions. pic.twitter.com/5Evv2NVax9
— Narendra Modi (@narendramodi) October 15, 2020
அவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “டாக்டர் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு அழியாத பங்களிப்பை வழங்கியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். இது ஒருபோதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை மில்லியன் கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.”
"கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்" என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன். #Abdulkalam pic.twitter.com/JvsVnoXnfm
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 15, 2020
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்” என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.
— Kamal Haasan (@ikamalhaasan) October 15, 2020
அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “என்னை அரசியலுக்கு வரவைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் அப்துல் கலாம் தான். அவரின் சாதனைகளும் தொலைநோக்கு பார்வையும் நாளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த உதவும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல் குடிமகனாக அப்துல் கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வறுமையான வினையூக்கி” என்று அவர் கூறியுள்ளார்.