இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10.33% வீழ்ச்சி; ராகுல்காந்தி குற்றச்சாட்டு!!

மத்திய அரசு பொருளதாரத்தைக் கையாண்ட விதத்தையும், கொரோனா வைரஸைக் கையாண்ட விதத்தையும் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், பொருளாதாரம் மோசமான நிலையில் வீழ்ச்சி அடைந்தது ஆகியவற்றைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் சர்வதேச நிதியம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10.33 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று குறிப்பிட்டிருந்தது. அதைக் குறிப்பிட்டும், வங்கதேசத்தைவிட கொரோனா வைரஸை இந்தியா மோசமாகக் கையாண்டது என்றும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, உலகப் பட்டினிக் குறியீட்டியில் இந்தியா 94-வது இடத்துக்குப் பின்தங்கியதையும் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். உலகப் பட்டினிக் குறியீட்டில் உள்ள 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75-வது இடத்திலும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக உள்ளது.

இதைக் குறிப்பிட்ட ராகுல் காந்தி ட்விட்டரில், “இந்தியாவில் ஏழைகள் எல்லாம் பட்டினியோடு இருக்கிறார்கள். ஏனென்றால், மத்தியில் ஆளும் மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது” எனச் சாடியிருந்தார்

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x