கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கும் கொரோனா!!!

கொரோனா வைரஸ் தீவிரமாக இந்தியாவில் பரவிவருகிறது, நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரோஹித், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றோருக்கு கொரோனா தோற்று உறுதியாகிய நிலையில் இன்று கர்நாடக முதல் மந்திரி பிஎஸ் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் முதல்மந்திரி எடியூரப்பா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு இதுவரை கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 819 ஆகவும்,2ஆயிரத்து 496 பேர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x