“காங்கிரஸ் மீதான உங்கள் விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும்” – குஷ்புவுக்கு மகிளா காங்கிரஸ் எச்சரிக்கை

காங்கிரஸ் மீதான விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என குஷ்புவிற்கு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஆர்.சுதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கட்சி மாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியிருக்கிறார் குஷ்பு. காங்கிரசில் இணைந்த போது என்னென்ன மரியாதை எல்லாம் தரப்பட்டது நினைவிருக்கிறதா?. ஆனால், பத்தோடு பதினொன்றாக உங்களை இணைத்த கட்சிக்காகவா தொண்டர்களின் இயக்கமான காங்கிரசை பழிக்கிறீர்கள்? எல்லா காலகட்டத்திலும் எங்களைப் போன்றவர்களின் உழைப்பிற்கு காங்கிரஸ் கட்சி அங்கீகாரம் வழங்கியிருக்கிறதே தவிர ஒதுக்கியதில்லை, ஒடுக்கியதில்லை.

மேகங்களால் வானை கறைப்படுத்த முடியாது. சில மேகங்கள் விலகும் போது வானம் இன்னும் அழகாகவே காட்சி தரும். துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு ஆறு ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தை மனசாட்சியோடு நினைவு கூர்ந்து விமர்சனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாக கூற விரும்புகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x