மனைவி கொடூரமாக கொலை.. போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலை!!

மதுரை செல்லூர் களத்துப்பொட்டல் நேரு தெருவை சேர்ந்தவர் பெருமாள் பாண்டியன் (வயது 50). மதுரை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு வழக்கில் இருந்து அரசு டாக்டரை விடுவிப்பதற்காக லஞ்சம் பெற்றதாக அவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் கடந்த 14-ந்தேதி, மதுரை சிறப்பு கோர்ட்டு பெருமாள் பாண்டியனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

பெருமாள்பாண்டியனின் சொந்த ஊர் தேனி மாவட்டம் வடுகப்பட்டி. இவரது மனைவி உமாமீனாட்சி(46), இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி ஆசிரியை. இவர்களின் மூத்த மகன் சுந்தர சுகீர்தன்(22). இளைய மகன் பிரனவ் கவுதம்(14). 9-ம் வகுப்பு. சுகீர்தன் வகுப்பிற்கு சென்று விட்டார். மதியம் அவர் திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டியிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கவில்லை. செல்போனில் பெற்றோரை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் எடுத்து பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்து உள்ளார்.

அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெருமாள்பாண்டியன் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி உமாமீனாட்சி உளியால் தலையில் வெட்டப்பட்டும், கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டும் பிணமாக கிடந்தனர். இந்த பயங்கர காட்சியை கண்டு சுந்தரசுகீர்தன் கதறி அழுதார்.

இதுகுறித்து செல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பெருமாள்பாண்டியனுக்கு கோர்ட்டு தண்டனை வழங்கியதில் இருந்து வீட்டில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான பணியில் ஈடுபட்டு இருந்தார். இதற்கிடையில் நேற்று காலையில் அவர்கள் 2 பேரும் வீட்டில் இருந்த போது தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த பெருமாள் பாண்டியன், மனைவியை தாக்கி உளியால் தலையில் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x