செல்போன் வாங்கித் தராத கணவன்… தூக்கில் தொங்கிய பி.எச்டி மாணவி!

நாகர்கோவிலில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி செல்போன் கேட்டு கணவர் வாங்கித் தராததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குற்றக்கரையை சேர்ந்தவர் ராஜகுமாரன். வாகனங்களுக்கு நிதி ஏற்பாடு செய்து தரும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பத்மஷீலா (31). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பத்மஷீலா (31) பெற்றோர் வீட்டில் தங்கி முனைவர் பட்ட ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். கணவரிடம், தனக்கு அலைபேசி வாங்கி தரும்படி கூறியுள்ளார். அதற்கு ராஜகுமாரன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பத்மஷீலா, நேற்று தாய் வீட்டில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முனைவர் பட்ட ஆய்வு படிப்பில் ஈடுபட்டிருந்த மாணவி சாதாரண செல்போன் தகராறால் தூக்கிட்டு வாழ்வை முடிந்துக்கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.