தெலங்கானாவில் தொடர் கனமழை.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஆக அதிகரிப்பு!!

தெலங்கானாவில் தொடர் கனமழை பெய்து வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. ஹைதராபாத்தில் மட்டும் கனமழையில் சிக்கி 20 பேர் பலியாகினர்.

தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையில் சுவர் இடிந்து விழுந்தும், மலையோரப் பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஹைதராபாத்தில் மட்டும் கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகளில் காவல்துறையினருடன் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளதாக ஹைதராபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x