“ஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை” என ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்..

ஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை என்று நேரடி நெல் கொள்முதல் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘விளைந்தும் விலையில்லை எனும் அவலநிலையாக, டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல்மூட்டைகள் நனைந்து, முளைத்து வீணாகின்றன. உரியமுறையில் கொள்முதல் நடைபெறாமல் ஆள்வோரின் ஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை!

இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். “காவிரிக் காப்பாளர்” என்ற பட்டம் மட்டும் சூட்டிக்கொண்ட திரு. பழனிசாமி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

பயிர்தான் விவசாயிகளின் உயிர்!’ என்று தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x