கருப்பர் கூட்டம் யுடியூப் சேனல் வீடியோக்கள் அனைத்தும் நீக்கம்!

கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த கருப்பர் கூட்டம் யுடியூப் சேனலில் இருந்து அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.

கருப்பர் கூட்டம் என்ற, ‘யு டியூப்’ சேனலில் இந்து மத புராணங்களை கேலி கிண்டல் செய்தும், ஆபாச புராணம் என்று வீடியோக்கள் வெளியிட்டனர். கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்தும், வீடியோ வெளியிடப்பட்டது. இதையடுத்து யுடியூப் சேனல் நிர்வாகிகள் மீது போலீஸில் புகாரளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல், சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்தல் என, ஐந்து சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து செந்தில்வாசன் (49). சுரேந்தர் நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

கருப்பர் கூட்டம் சேனலை முழுவதுமாக முடக்குமாறு யுடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில் சேனலில் இருந்த நூற்றுக்கணக்கான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x