பெங்களூருவில் மார்பிங் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.1.3 கோடி பறித்த பெண் கைது!!

பெங்களூருவில் பெண் ஒருவர் தன் ஆண் நண்பரின் முன்னாள் காதலியிடம் அவரது மார்பிங் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.1.3 கோடி பறித்துள்ளார். அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு, கல்கேரியை சேர்ந்தவர் அனு (28). திருமண மாகி கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது ஆண் நண்பர் மகேஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன் மகேஷ் தனது முன்னாள் காதலி மேகாவுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொடர்பு ஏற்படுத்திக் கொண் டுள்ளார். இவர்களின் காதல்11 ஆண்டுகளுக்கு முன் முறிந்துள்ளது. இதன் பிறகு ஒயிட்பீல்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை மேகா மணந்துள்ளார்.

இந்நிலையில் மகேஷ் மூலம் மேகாவுக்கு நண்பர் ஆன அனு, சமூகவலைதளங்களில் மகேஷ் – மேகா புகைப்படங்களை சேகரித்துள்ளார். இதில் சில படங்களை மார்பிங் செய்து மேகாவுக்கு அனுப்பி, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். கடந்த ஓராண்டில் மேகாவிடம் இருந்து ரூ.1.3 கோடி பறித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம்அனு ரூ.15 லட்சம் கேட்டபோதுமேகா தர மறுத்துள்ளார். இதையடுத்து சமூகவலைதளங்களில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மேகாவின் கணவர் ரவி, போலீஸில் புகார் செய்தார்.

இதுகுறித்து மாநகர துணை காவல் ஆணையர் தேவராஜ் கூறுகையில், “ரவிஅளித்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது அனு இருவரின் புகைப்படம், வீடியோக்களை மார்பிங் செய்து பணம் பறித்ததுதெரியவந்த‌து. அனுவை கைதுசெய்துள்ளோம். இதில் மகேஷுக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்கிறோம்” என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x