ஐ.பி.எல்., போட்டிகளில் இருந்து வெளியேறுகின்றனவா சீன நிறுவனங்கள் ?

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேற சீன நிறுவனங்கள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சீனாவை சேர்ந்த டிக் டாக் உட்பட 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று பிபிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த தொடரின் முதன்மை ஸ்பான்சராக சீனாவை சேர்ந்த விவோ நிறுவனம் உள்ளது. இந்த முறை சீன ஸ்பான்சர்களை தக்க வைத்து கொள்ள பிபிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேற சீன நிறுவனங்கள் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.