கொரோனா தொற்று உலகில் இல்லை எனக் கூறி வந்த உக்ரைன் உடற்பயிற்சி நிபுணர் கொரோனா தொற்றால் பலி!

உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் டிமிட்ரி ஸ்டுஷுக் (Dmitriy Stuzhuk) (33) உலக பிரபல பிட்னெஸ் மாடலான இவர் துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு தனது தாய் நாடான உக்ரைனுக்கு திரும்பினார். இவருக்கு சோபியா என்ற மனைவியும்,மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்ட டிமிட்ரிக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

நுரையீரல் மற்றும் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதோடு, ஒரு முறை இதய துடிப்பே நின்று விட்டது. உடனே மருத்துவர்கள் இதயத்தை இயக்க வைக்க பலகட்ட முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அது எந்தவித பலனையும் கொடுக்காத நிலையில், டிமிட்ரி இறந்து விட்டதாக மருத்துவமனையிலிருந்து செய்தி வந்தது.

இது குறித்து அவர் மனைவி சோபியா கூறுகையில், “என்னுடைய கணவரின் இறப்பை தெரிவிக்கும் கொடுமை எனக்கு நடந்துள்ளது. இதுபோன்ற கொடுமை இனிமேல் யாருக்கும் நடக்க கூடாது கொரோனாவை யாரும் அலட்சியமாக கருத வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x