“தவறான தகவல் பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும்” – நீட் தேர்வு முகமை

தேர்வில் எந்தவித குளறுபடியும் நடைபெறவில்லை என தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: கடந்த 13ம் தேதி நடைபெற்ற நீட்தேர்வு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இத் தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி என வெளியான ஒஎம்ஆர் தாள்கள் அனைத்தும் போலியானவை என தகவல் வெளியானது.
இதனை மறுத்துள்ள நீட் தேர்வு முகமை நீட்தேர்வு விடை தாள்களில் எந்தவித குளறுபடியும் இல்லை. தவறான தகவல் பரப்பும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும். போலியான தகவல் வெளியிட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவை தெரிவித்துள்ளது