சினிமாவில் மட்டும் நடிங்க.. உண்மையான வாழ்க்கையில் நடிக்காதீங்க!! – தன் உரிமையை உரக்கச் சொல்லும் ஜெயப்ரவி ..

”ஹிந்தி படிக்கிறது என்னோட ஆசை. உங்களுக்கு என்னங்க பிரச்னை,” என, மதுரை சிறுமி கேள்வி எழுப்பும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவுகிறது.

மதுரை, எச்.எம்.எஸ்., காலனியைச் சேர்ந்த வினோத் – கவுரி தம்பதி மகளான ஜெயப்ரவி, 11; தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோ: ஹிந்தியை எதிர்ப்பவர்களுக்கு ஒரு சில விஷயங்கள் சொல்ல வேண்டும். என்னோட ஆசை, விருப்பம், ஹிந்தி படிக்கிறது. மத்திய அரசு, அதை இலவசமாகவும் கற்று கொடுக்க தயாராக இருக்கிறது.

உங்களுக்கு என்னங்க பிரச்னை. உங்கள் மூளையை வைத்து படிக்க போறேனா… உங்கள் பணத்தை வைத்து படிக்கப் போறேனா… இல்லையே… அப்புறம் ஏன்? சினிமாத் துறையில் இருக்கிறவர்கள், ‘ஹிந்தி வேண்டாம் போடா’ என, ‘டிரெண்டிங் டி – ஷர்ட்’ போட்டிருங்கீங்க.

சினிமாவில் மட்டும் நடிங்க. உண்மையான வாழ்க்கையில் நடிக்காதீங்க. உங்க பசங்க மட்டும் எல்லா மொழியும் கற்றால் ஓ.கே., என்னை போன்றவர்கள் தமிழ் மட்டும் தான் படிக்க வேண்டுமா. என் கல்வி. என் உரிமை. அதை எதிர்க்க உங்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x