கோவையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியாணி கடை நடத்தி வந்த திருநங்கை !!!

கோவையில் பிரபல பிரியாணி கடையை தொடங்கி நடத்தி வந்த திருநங்கை சங்கீதா, வீட்டில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சாயிபாபா காலனி பகுதியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா. இவர் திருநங்ககைகள் நல்வாழ்விற்காகவும், பல்வேறு நலத் திட்டங்களுக்காகவும் தொடர்ந்து பணியாற்றி வந்தவர். மேலும், கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் தமிழகத்திலேயே முதன்முறையாக பிரியாணி உணவகத்தை துவங்கி, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால், உடனிருந்த திருநங்கைகள் இன்று அவரது  வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, சங்கீதா உடலில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த தண்ணீர் டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாயிபாபா காலனி காவல்நிலையத்தில் இருந்து சில அடி தூரத்திலேயே சங்கீதா வீடு அமைந்துள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் அப்பகுதியினரை அச்சத்தில் ஆழ்த்தியது. கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x