சென்னையில் பூட்டிக்கிடந்த வீட்டில் திருடிய நபர்.. லைவ்வாக அயர்லாந்திலிருந்து பார்த்த உரிமையாளர்!!

சென்னையில் பூட்டிக்கிடந்த வீட்டில் திருடிய நபரை, சிசிடிவி கேமரா மூலம் வெளிநாட்டில் இருந்து பார்த்து உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர்.

போரூர் அருகே செட்டியார் அகரம், மூர்த்தி நகரில் தனியாக வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி(67). இவரது மகன் அருள்முருகன், அயர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வசிக்கிறார்.

இந்நிலையில், மூதாட்டி நேற்று அண்ணா நகரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அருள்முருகன், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தாய் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது செல்போனில் பார்த்த போது வீட்டிற்குள் வேறு ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுகுறித்து மதுரவாயல் காவல்துறைக்கு தகவல் அளிக்க, அங்கு விரைந்த காவல்துறையினர் லேப்டாப்புடன் சுவர் ஏறி வெளியே குதித்த செங்கல்பட்டைச் சேர்ந்த சைக்கோ முரளி என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், சில தினங்களுக்கு முன், கூடுவாஞ்சேரியில் வாசலில் கோலம் போடாத வீடுகளைத் தேடிப்பிடித்து‌, உள்ளே நுழைந்து கொள்ளையடித்து, காவல்துறையிடம் பிடிபட்டதாக கூறியுள்ளார். இதுவரை கொள்ளையடித்த 4 இடங்களிலும் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும் சைக்கோ முரளி கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x