குடியிருப்புப் பகுதியில் மின்சாதனப் பொருட்களை வீசிய மர்மநபர்கள்??

எடப்பாடி அருகே குடியிருப்புப்பகுதியில், இரவு நேரத்தில் வீசப்பட்ட மின்சாதனப்பொருட்களால் அப்பகுதி மக்கள் அச்சம்மடைந்துள்ளனர்.

எடப்பாடி நகராட்சிப்பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் ஏ, பி, சி என பல்வேறு வகையிலான 300க்கும் மேற்பட்ட வீடுகளில், அதன் உரிமையாளர்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விரிவாக்கம் செய்யும் வகையில், ஏற்கனவே உள்ள குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில், புதிதாக 500க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை அமைத்திடும் பணியானது, வீட்டுவசதி வாரியஅலுவலர்கள் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் அருகில், ஆயிரக்கண்கான மின் விளக்குள், மற்றும் மின்சாதனப் பொருட்களை மர்ம நபர்கள் வீசிசென்றுள்ளனர். திடீரென வீசப்பட்ட மின் சாதனப்பொருட்களால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் அவற்றுள் சில மின் விளக்குகள் நல்ல நிலையில், இருப்பதாக செய்தி பரவவே, சுற்றுப்பகுதி மக்கள் அந்த மின்சாதனப்பொருட்களை தங்கள் வீடுகளுக்கு அள்ளிச்சென்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x