அமெரிக்காவின் பாடப் புத்தகங்களில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள அசாம் விவசாயி!!!

550 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய அசாமைச் சேர்ந்த விவசாயி ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு அமெரிக்க பாடப்புத்தகங்களில் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.
கிழக்கு அசாமில் பகுதியில் மஜூலித் தீவின் சுற்றுச்சூழல் கெடுவதை கண்டு சிறுவயது முதலே கவலைகொண்ட ஜாதவ் பயேங் (57 வயது), மரங்களை நடத் தொடங்கினார். அம்மரங்கள் காடுகளாக வளரும் வகையில் தனது அயாராத உழைப்பினால் 550 ஹெக்டர் பரப்பளவில் காட்டை உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கியுள்ள காட்டில் யானை, காண்டாமிருகம், புலி என பல விலங்கினங்களும் வாழ்ந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரிஸ்டெல் கனெக்டிக்கட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் அசாம் ஜாதவ் பயேங்கின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
அங்கு பயிலும் மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வியில் ஒரு பகுதியாக விவசாயி ஜாதவின் சாதனைகளைக் குறித்து படிக்கிறார்கள் என்று அங்கு பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி ஆசிரியர் நவாமி சர்மா தெரிவித்துள்ளார்.
தரிசு மண்ணில் 550 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய ‘Forest man of India’ என்று அழைக்கப்படும் விவசாயி ஜாதவ் பயேங் சாதனையை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டமும், கர்மயோகி விருதையும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.