‘வாடகையா கேக்குற.. இந்தா கத்திக்குத்து’ சென்னையில் பகீர் சம்பவம்

சென்னை, குன்றத்தூரில் 4 மாதமாக வாடகை தராததை கேட்ட வீட்டு உரிமையாளர், வாடகைக்கு குடியிருந்தவரால் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்

திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் குணசேகரன்(50), ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் இவர் குன்றத்தூர், பண்டார தெருவில் சொந்தமாக வீடு கட்டி ஒரு வீட்டில் அவரும் மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் அஜித் (21), என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாத காரணத்தால் கடந்த நான்கு மாதங்களாக வீட்டு வாடகை அஜித் குடும்பத்தினர் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு அஜித் பெற்றோரிடம் குணசேகரன் வாடகை கேட்டுள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை, நள்ளிரவு வீட்டிற்கு வந்த அஜித்திடம் பெற்றோர் கூறியதையடுத்து இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனை குத்தியுள்ளார். குத்தப்பட்ட குணசேகரன் தன்னை காத்துக்கொள்ள தெருவில் ஓடியுள்ளார் அப்போதும் விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் இறந்து போன குணசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலையாளி அஜித்தை கைது செய்தனர்.

ஊரடங்கு காலத்தில் வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என தமிழக அரசும், நீதிமன்றமும் தெரிவித்திருந்த நிலையில் நான்கு மாதமாக தராத வாடகையை கேட்ட வீட்டின் உரிமையாளரை வாடகைதாரர் ஓட, ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x