இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யப்படும் மாநிலலங்கள் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது விவகாரங்கள் மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்பட்டு இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கேரள மாநிலம் 1.388 குறியீட்டுப் புள்ளியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் 0.912 புள்ளியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆந்திரா (0.531), கர்நாடகம் (0.468) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. முதல் நான்கு இடங்களை தென் மாநிலங்கள் பிடித்துள்ளன.
