“ரஜினியின் ஆதரவாளர்கள் எல்லோருமே பாஜகக்காரங்க தான்!” குமரி கிருஷ்ணன் பேட்டி!!

ரஜினியின் ஆதரவாளர்கள் எல்லோரும் பாஜகவின் ஆதரவாளர்கள் தான் என பாஜக மாநில பிரச்சாரப் பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் பிரச்சாரம் மற்றும் வெளியீட்டுப் பிரிவு மாநில நிர்வாகிகள் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் போது, மாநிலத் தலைவர் குமரி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. திமுக உடைந்து வரும் கட்சியாக இருக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் வேளாண் சட்டங்களை பிரதமர் கொண்டு வந்துள்ளார். இதை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க மண்டலம் வாரியாக பாஜக வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது.

ரஜினியின் ஆதரவாளர்கள் எல்லோருமே, பாஜக-வின் ஆதரவாளர்கள் தான். அவரது ஆதரவாளராக இருந்த அண்ணாமலை ஐபிஎஸ் பாஜகவில் இருக்கிறார். படித்தவர்கள் கையில் ஆட்சி இருக்க வேண்டும் என ரஜினி கூறியிருக்கிறார். அந்தக் கருத்து பாஜகவுக்குத் தான் பொருந்தும்.” இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x