லடாக்கின் 16,000 அடி உயரப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்து சாதனை படைத்துள்ள மருத்துவர்கள்!!

இந்திய இராணுவ மருத்துவர்கள் லடாக்கில் 16,000 அடி உயரப் பகுதியில் குடல்வால் அழற்சி அறுவைசிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
லடாக் எல்லையில், சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையே பிச்னை நீடித்து வருகிறது. அங்கு தற்போது கடும் குளிர் நிலவி வரும் சூழலில், இந்திய இராணுவ மருத்துவர்கள் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
அதாவது, 16,000 அடி உயரத்தில் கடும் குளிரில் இராணுவ வீரர் ஒருவருக்குக் குடல்வால் அழற்சி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். கடும் குளிரில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும்.
இதில் லெப்டினன், ஒரு மெஜர், ஒரு கேப்டன் என்று மூன்று மருத்துவர்கள் இந்த பணியைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளனர். கிழக்கு லடாக் பகுதியில் நடத்தப்பட்ட இந்த அறுவைசிகிச்சையை இராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. அதில் “ஒரு அவசர அறுவை சிகிச்சையாக இது செய்யப்பட்டது. 16,000 அடி உயரத்தில் உறைபனி சூழ்ந்த இடத்தில் நடத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை செய்கையில் மருத்துவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானதாகவும், வெற்றிகரமாக அதைச் செய்து முடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது அந்த வீரர் நலமுடன் இருக்கிறார் என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.