9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே, கடந்த 28 ஆம் தேதி முதல், வடகிழக்கு பருவ மழை தொடங்கியது.

அந்த வகையில், தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, கோயம்புத்தூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x