மலேஷியா முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறை!!!

கோலாலம்பூர்: ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பல கோடி ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் நஜீப்பின் பங்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

மலேசியாவில் உயர் பதவியில் இருந்த நபர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. தீர்ப்பு வெளியான போது, எந்த சலனமும் இல்லாமல் நஜீப் அமைதியாக நின்றிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும், இந்த முறைகேடு நடந்தது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்றும் நஜீப் கூறியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x