நியூசிலாந்து அமைச்சரவையில் முதன்முறையாக அமைச்சராக அங்கம் வகிக்கும் இந்திய வம்சாவளி பெண்!!

உலகம் முழுவதும் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் வேளையில் சமீபத்தில் நியூசிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையிலான நியூசிலாந்து தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதனையடுத்து பிரதமர் தமது அமைச்சரவையில் 5 பேரை புதிதாக நியமித்திருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணனும் (வயது 41) ஒருவர். இவர் பன்முகத்தன்மை, உடையவர். தற்போது பூர்வக்குடி மக்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தாலும் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராகவும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா இந்தியாவில் கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டிருந்தாலும் சென்னையில் பிறந்தவர். இவருக்கு . பள்ளிக் கல்வியை சிங்கப்பூரில் முடித்து , உயர் கல்வியை நியூசிலாந்தில் கற்றவர். இவர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சுரண்டப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்றவர்களின் நலனுக்காக அரும்பாடுபட்டு வருகிறார்.
முதன் முறையாக 2017ல் தொழிலாளர் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பிரியங்கா தன் கணவருடன் ஆக்லாந்தில் வசித்து வருகிறார்.புதிய திறமையாளர்களை அமைச்சரவையில் சேர்ப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், தகுதியை அடிப்படையாகக் கொண்டு நியமிக்கப்பட்டிருந்தாலும், வேறுபட்டது என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.