“தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்?” மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி!!!

தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும் தவறாக பயன்படுத்துவதாக கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கூறுகையில், “தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி மருகி வருகின்றனர். தமிழ்வழி இடஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? என கேள்விகள் எழுப்பினர்.

மேலும் தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x