ஊரடங்கில் அபராத வேட்டை; புலம்பும் மக்கள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து ரூ.17.21 கோடி கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், பலரின் வாழ்வாதாரம் அழிந்துள்ள நிலையில், அரசு எந்த உதவியும் செய்யாததுடன், மக்களிடம் இருந்து இப்படி பணத்தை பறிக்கலாமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

ஆனால், அரசின் கஜானாவை நிரப்புவதற்காக, யார் சாலையில் சென்றாலும், முறையாக விசாரிக்காமல், வாகனங்களை போலீசார் பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த மகேஷ் கூறுகையில், “எனக்கு சென்னைக்குள் போவதற்கு இ-பாஸ் இருந்தும் வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டார்கள்.

எனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், மெடிக்கல் சென்ற போதே இது நடந்தது. ‘உங்களிடம் இ-பாஸ் இருந்ததை கவனிக்கவில்லை. கேஸ் போட்டுவிட்டோம். வாகனத்தை பறிமுதல் செய்கிறோம்’ என்று அலட்சியமாக போலீசார் சொன்னார்கள். இவர்களுக்கு கருணையே கிடையாது. கையில் காய்கறி பையுடன் வந்தாலும் கூட, அதைப்பார்த்த பிறகும், எனது நண்பரின் வாகனத்தை பறிமுதல் செய்கிறார்கள். ” என்று குமுகிறார் மகேஷ்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்டதற்காக 8 லட்சத்து 13 ஆயிரத்து 877 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 21 ஆயிரத்து 384 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் ரூ.17 கோடியே 21 லட்சம் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x