அண்ணன் மகளை ஆசை வார்த்தை கூறி கெடுத்த சித்தப்பா! தூக்கு போட்டுக்கொண்ட தந்தை…

மகள் முறை உறவு கொண்ட பெண்ணை ஆசை வார்த்தை கூறி கெடுத்த சித்தப்பாவின் செயலால், பெண்ணின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாரியப்பனூரை சேர்ந்தவர் மணிகண்டன். ஏற்கனவே திருமணமான மணிகண்டன், நர்ஸ் வேலை பார்க்கும் தனது ஒன்றுவிட்ட அண்ணன் மகளை மயக்கி, திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த சரண்யாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். அவன் உனக்கு சித்தப்பா முறை வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் சரண்யாவோ அவரை தான் திருமணம் செய்துகொள்வேன் என பிடிவாதமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சரண்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மணிகண்டனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டார். இது குறித்து சரண்யாவின் குடும்பத்தினர் வரஞ்சரம் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

பின்னர் மணிகண்டனின் முதல் மனைவி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சரண்யாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் மீண்டும் சரண்யாவை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை அவரது தந்தைக்கு அனுப்பியுள்ளார் மணிகண்டன். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரண்யாவின் தந்தை முருகேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x