பேஸ்புக் இந்திய நிர்வாகிகள் செப்., 2-ல் ஆஜராக பாராளுமன்ற நிலைக்குழு உத்தரவு!

பேஸ்புக் இந்தியா நிர்வாகம் போலி செய்திகள், வெறுப்பு பேச்சுக்களை தடுப்பதில் பாரபட்சமாக நடப்பதாக செய்தி வெளியான நிலையில், அது குறித்து விளக்கமளிக்க செப்டம்பர் 2-ல் ஆஜராகுமாறு பாராளுமன்ற ஐ.டி., நிலைக்குழு உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக்கை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கட்டுப்படுத்துவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. அதில் பேஸ்புக் இந்தியாவின் மூத்த கொள்கை அதிகாரி அன்கி தாஸ் என்பவர் பா.ஜ.கவுக்கு சாதகமாக செயல்பட்ட நிகழ்வுகளை குறிப்பிட்டிருந்தனர். அவர் மீது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வழக்கு பதிவாகியுள்ளது.
இது குறித்து ராகுல் காந்தி புகார் கிளப்ப இப்பிரச்னை தேசியளவில் செய்தியானது. தகவல் தொழில்நுட்பத்துறைக்கான பார்லி.நிலைக்குழுவின் தலைவராக உள்ள சசிதரூர், இதனை விசாரிப்பதாக கூறியிருந்தார். தற்போது செப்டம்பர் 2-ம் தேதி பாராளுமன்ற நிலைக்குழு கூடுவதாகவும், பேஸ்புக் இந்தியா பிரதிநிதிகள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமெனவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.