இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்த ரெட்மியின் ஸ்மார்ட் பேண்ட்!

பல தனித்துவமான சிறப்பம்சங்களுடன் ரெட்மியின் ஸ்மார்ட் பேண்ட் இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் பேண்ட் இப்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் பேண்ட்டின் விலை ரூ. 1,599 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், எம்ஐ.காம் , எம் ஐ ஷோரூம்கள் மற்றும் பிற மொபைல் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். சுலபமாக சார்ஜ் செய்யும் வகையில் யுஎஸ்பி வசதி செய்யப்பட்டுள்ளது. இதயத்துடிப்பு மற்றும் ஸ்லீப்பிங் ட்ராக் கண்காணிக்கும் வசதிகள் இதில் உள்ளன. பச்சை, ஆரஞ்ச், நீலம், கருப்பு என பல வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் பேண்ட் கிடைக்கிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட் பேண்ட் இந்திய விலையில் ரூ.1,100-க்கு விற்பனையாகிறது.
1.08 இன்ச் கலர் டிஸ்பிளே கொண்டுள்ள இந்த பேண்ட் 24 மணி நேரமும் இதயத்துடிப்பை கண்காணிக்கிறது. 5 ஸ்போர்ஸ் மோட்களை கொண்டுள்ளது. பிட்னஸ் விரும்பிகளுக்கு இந்த பேண்ட் பல வகைகளில் உபயோகமாக இருக்கலாம். தண்ணீர் பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால், நீச்சல் பயிற்சி செய்யும் போதும் ரெட்மி ஸ்மார்ட் பேண்டை பயன்படுத்த முடியும். மெசேஜ் பார்க்க வேண்டும் என்றால், பேண்டை தொட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக பேண்டை சற்று உயர்த்தினால் போதும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.