மறுகூட்டல் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியீடு!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வின் மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்கம் இதுகுறித்து நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பங்கேற்று, அதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் மாற்றம், தேர்வர்கள் பதிவு எண்கள் பட்டியல் இன்று மதியம் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

வெளியிடப்படும் இந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் மறுகூட்டலில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் www.dge.tn.gov.in இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து, உங்களுக்கான திருத்தப்பட்ட மறு கூட்டல் மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என அந்த அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x