டில்லி மருத்துவமனியில் சோனியா அனுமதி

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.
சோனியா, வியாழன் இரவு 7 மணியளவில், டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான உடல் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடநிலை நிலையாக உள்ளதென மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளும் சோனியா தற்போது அங்கு கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் சர் கங்கா ராம் தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்ந்ததாக கூறப்படுகிறது.