மற்ற ஊடகவாதிகள் கைது போதெல்லாம் வாயைத் திறக்காத பாஜக.. அர்னாபுக்கு மட்டும் வரிந்துகட்டுவது ஏன்??

மும்பை ராய்காட் போலீஸ் புதனன்று ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை 2018ம் ஆண்டு புகார் எழுப்பப்பட்ட ஒரு தற்கொலைத் தூண்டுதல் வழக்கில் மும்பை போலீஸ் கைது செய்தது பரபரப்பானது.

தற்போது அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் பள்ளி ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் கோரல் வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

இவரது ரிபப்ளிக் டிவி சேனலில் செய்திகளை ஒருதலைப்பட்சமாக அளிப்பவர் என்றும் மதநல்லிணக்கத்துக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்துத் தாக்கி செய்தி வெளியிடுவதாகவும்,நடுநிலையற்றவர் என்றும் அர்னாப் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.

ஆனால் நடிகர் சுஷாந்த் வழக்கில் தற்கொலை இல்லை என்ற ரீதியில் புலன் விசாரணை நடத்துவதாக ரிபப்ளிக் டிவி ஆளும் சிவசேனாவை அதில் ஈடுபடுத்தி செய்திகள் வெளியிட்டதும் அர்னாபுக்கு எதிரான சிவசேனாவின் நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றே சிவசேனா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர் மீது 2018-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அரசு தொடுத்த வழக்குகளைப் பார்ப்போம்:

53 வயது கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் இவரது தாயார் குமுத் நாயக் ஆகியோருக்கு கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்காமல் இவர்களை மிரட்டியதாகவும் அதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அன்வர் நாயக் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே புகார் பட்னாவிஸ் முதல்வராக இருந்த போதும் வந்தது, ஆனால் இழுத்து மூடப்பட்டது, தற்போது சிவசேனா, என்சிபி, காங் கூட்டணி ஆட்சியில் மீண்டும் திறக்கப்படுகிறது, இது பழிவாங்கும் செயல் என்று பாஜக தரப்பினர் இவருக்கு வரிந்து கட்டுகின்றனர். மற்ற ஊடகவாதிகள் கைது செய்யப்படும்போதெல்லாம் வாயைத்திறக்காத பாஜக இவருக்கு மட்டும் வாயைத்திறக்கிறது என்றால் இவரது அடையாளம் தெரிகிறது அல்லவா என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x