“அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ‘FASTag’ கட்டாயம்!” மத்திய அரசு அறிவிப்பு!!

அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் பழைய வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் FASTag கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் வகை மோட்டார் வாகனங்களில் பழைய வாகனங்களுக்கு வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் FASTag கட்டாயம் என மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அமைச்சகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ன் படி, 2017-ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல், வாகன உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கும் FASTag கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

FASTag பொருத்தப்பட்ட பிறகே அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கு FASTag பொருத்துவது கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x