“பீகார் சில தொகுதிகளில் மறு ஓட்டு எண்ணிக்கை” – தேர்தல் கமிஷன் அறிவிப்பு

பீகார் ஓட்டு எண்ணிக்கையில் சில தொகுதிகளில் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் ஓட்டு எண்ணிக்கையில் தற்போது வரையில் எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நீடித்து வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இது வரையில் 103 தொகுதிகள் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தல் கமிஷன் ஊடகங்களை சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியது. அப்போது அவை கூறியதாவது: 95 சதவீத ஓட்டுக்கள் எண்ணப்பட்டுவிட்டன. தேர்தல் அதிகாரிகளுக்கு யாரும் எந்தவிதத்திலும் அழுத்தம் தரப்படவில்லை . சில தொகுதிகளில் மட்டும் மறு எண்ணிக்கை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளது.